முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இத்துறையின் கீழ் முதல்-அமைச்சர் அழைப்பு மையமும் (சி.எம். கால் சென்டர்) செயல்படும் என்றும், 1100 என்ற எண்ணில் பொதுமக்கள் அனைத்துவிதமான புகார்களையும் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்-அமைச்சர் அழைப்பு மையம் சென்னை சோழிங்கநல்லூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் இந்த மையத்துக்கு ஏராளமானோர் தொடர்புகொண்டு தங்கள் புகார்களை தெரிவித்து, தீர்வு கண்டு வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு இந்தநிலையில் இந்த அழைப்பு மையத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென வந்தார்.