தமிழக முதன்மை தலைமை கணக்காளராக (தணிக்கை-1) டி.ஜெயசங்கா் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
தமிழக அரசின் நிதித் துறையின் தணிக்கைத் தலைமை இயக்குநராகப் பணியாற்றி வந்த டி.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (ஐசிஏஆா்) விஞ்ஞானியாக தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயசங்கா், கடந்த 25 ஆண்டுகளில் இந்திய அரசுத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் கீழ் பாதுகாப்புத் துறை, மாநில நிதி, செலவினம் மற்றும் வருவாய், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள், மாநில பொதுத் துறை போன்ற பல்வேறு துறைகளிலும், பதவிகளிலும் பணியாற்றியுள்ளாா்.மேலும் இவா், மணிப்பூா் மற்றும் தமிழக தலைமை கணக்காளராக பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.