தமிழ்நாடு கருவூல கணக்குத் துறை உயர் அலுவலர் சங்கத்தின் அன்பிற்குரிய அலுவலர்களுக்கு வணக்கம்.. நமது துறையில் IFHRMS திட்டத்தை செவ்வனே செயல்படுத்தியதற்காக, சுதந்திர தின விழாவின்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் விருது வழங்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே.. இதன் பொருட்டு, நேற்று (17.08.2020) மாண்புமிகு துணை முதல்வர் அவர்களையும் , மதிப்பிற்குரிய கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதி துறை) அவர்களையும் சந்தித்து நன்றிகளைத் தெரிவித்து வாழ்த்துக்கள் பெறப்பட்டது.. இன்று (18.08.2020) மதிப்பிற்குரிய தலைமைச் செயலாளர் அவர்களையும், நிதித்துறை கூடுதல் செயலாளர்களையும், நிதித் துறை துணை செயலாளர்க ளையும் மற்றும் நமது கருவூல கணக்குத்துறை ஆணையர் அவர்களையும் சந்தித்து நன்றிகளைத் தெரிவித்து, வாழ்த்துக்கள் பெறப்பட்டது.. இந்நிகழ்வின் போது கூடுதல் இயக்குனர் நிர்வாகம், கூடுதல் இயக்குனர் மின் ஆளுமை, கூடுதல் இயக்குனர் திட்டம், மற்றும் சங்கத்தின் மாநில தலைமை நிலைய நிர்வாகிகள் அனைவரும் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். இவண் ஆர். சுப்பிரமணியன் மாநில பொதுச்செயலாளர்.
- Home
- தமிழ்நாடு கருவூல கணக்குத் துறை