நாசரேத்தைச் சேர்ந்த 106 வயது ஓய்வூதியருக்கு உயிர் வாழ் சான்று வழங்கப்பட்டன.
தமிழ் நாடு அரசு ஓய்வூதியர்கள் நேர்காணல் 24-25 ஆண்டு முதல் ஓய்வூதியம் பெறுபவர்கள். தங்களது பிறந்த நாள் மாதத்திலும் அடுத்து 30 நாட்கள் சலுகை காலத்திலும் பெறுவார்கள்.குடும்ப ஓய்வூதியம், ஓய்வூதியம் பெற்ற மாதத்திலும் அடுத்து 30 நாட்கள் சலுகை காலத்திலும் நேர்காணல் செய்து கொள்ளலாம்.இது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவங்கி நடை பெற்று வருகிறது.
நாசரேத் சாமு ஞானவிலாஸ் தெருவில் குடியிருந்து வரும் டேனியல் சுந்தரராஜ் என்பவர் கோயம்புத்தூர் விவசாய பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 48 ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்று 106 ஆண்டு களை கடந்துள்ளார்.இவருக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் கருவூல அலுவலர் மற்றும் ஓய்வூதியர்கள் வட்ட தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி ஆகியோர் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அலைபேசி முலம் நேர் காணல் செய்தனர்.
இந்த ஆண்டும் ஓய்வூதியர்கள் வட்ட தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி நேரில் சென்று டேனியல் சுந்தரராஜ் சந்தித்து ஆசி பெற்றார். அவருடன் நாசரேத் வட்டார தலைவர் ஜெயசந்திரன், செயலாளர் கொம்பையா ஆகியோர் உடனிருந்தனர்.பின்னர் பயோ மெட்ரிக் முறையில் கைரேகை மற்றும் விழித்திரை வழியாக நேர்காணல் இயலாததால் மருத்துவர் தாமஸ் கிங்ஸ்லியின் உயிர் வாழ் சான்றிதழ் பெற்று வந்தனர்.