சென்னை: மாநில திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே வரைமுறைகளையும், கட்டுப்பாடுகளையும்
மத்திய அரசு பின்பற்றக்கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்
தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசியதாவது:
பிரதமர் சூரிய ஒளி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 11,722 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3,472 சூரிய மின் நிலையங்கள்
நிறுவப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் முடிவுறும் பட்சத்தில்
இணைப்புகள் கொடுக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஒப்புதலுக்காக கடந்த 3 ஆண்டுகளாக காத்திருக்கிறது.
நம்முடைய மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத
அதேவேளையில், நாக்பூர் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கும், கொச்சி மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கும் ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு குருகிராம், புனே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.
நம்முடைய மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்
திட்டத்துக்கான ஒப்புதல் நிலுவையில் இருக்கக்கூடிய நிலையிலும்கூட, இந்திட்டத்துக்கான முழு செலவினத்தையும் தமிழகத்தின் சொந்த மாநில
நிதியிலிருந்து முதல்வர் மேற்கொண்டுள்ளார்.
இதனால் மிகக் கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டிருக்கிறது.
இந்தவொரு நியாயமற்ற செயலால், மாநில அரசுக்கு இந்த
வருடம் மட்டும் ஏறத்தாழ ரூ.12,000 கோடி கூடுதல்
செலவினம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயல், அதற்குப் பிறகு வந்த தென்மாவட்ட வெள்ளம், அதற்கெல்லாம்
நிவாரணத் தொகையாக மத்திய அரசிடம் ரூ.37,906 கோடி
கேட்டிருக்கிறோம். ஆனால், ரூ.276 கோடி தான் நமக்கு
கிடைத்ததுள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு ஜிஎஸ்டி வரி ரூ.20,000 கோடி வரவேண்டியிருக்கிறது.
மாநில திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே வரைமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு அரசு பின்பற்றக்கூடாது. அதேபோல் நீங்கள்
ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளின் அடிப்படையில் அதனை செய்ய
வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.