தமிழ்நாட்டுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை..நிர்மலா சீதாராமன் முகத்துக்கு நேரே தங்கம் தென்னரசு விளாசல்!

post image

சென்னை: உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக சாடினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான தேவையான ரயில்வே, சாலைத் திட்டங்களைப் பட்டியலிட்டு பட்ஜெட்டில் உரிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. டெல்லியில் மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: 2024-2025ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்! ஜூலை 23ல் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்! பெரிய அளவிலான உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தி வருகிறது. அடுத்தடுத்து வந்த மத்திய வரவு-செலவு திட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான இரயில்வே திட்டங்களே தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன..