டெல்லியில் 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது: தங்கம் தென்னரசு பங்கேற்பு

post image

நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை 1 ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. இந்த 6 ஆண்டுகளில் இதுவரை ஜிஎஸ்டி கவுன்சிலின் 49 கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டம் டெல்லியில் பிற்பகல் 12 மணியளவில் தொடங்கியது.  மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. மாநில நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ள நிலையில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டுள்ளார். Also Read - மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும்நோக்கில், அத்தகைய நிறுவனங்களால் வழங்கப்படும் செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

post image


https://www.dailythanthi.com/News/India/fm-sitharaman-chairs-50th-council-meet-in-delhi-heres-what-to-expect-1005397